இன்று காலை சன் டீவீயில் சுகி சிவம் கவிஞர் சுரதா பற்றிய ஒரு புத்தகத்தை பற்றி பேசினார். அதில் பல விஷயங்கள் சுரதாவை பற்றி சொன்னார் .அதில் ஒன்று கவிஞர் சுரதா கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் எதோ இலக்கிய விழாவுக்காக சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பி சென்றுருக்கிறார் .கூட இருந்தவர்களுக்கு வியப்பு , காரணம் அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.
கோயிலுக்கு சென்று எல்லா சிலைகளின் அழகையும் பார்த்து விட்டு ஒரு அர்ச்சகரை பார்க்கவேண்டுமென்று கூறி இருக்கிறார்.அர்ச்சகரை பார்த்து , உங்களுக்கு இந்த நந்தவனத்தில் எங்கு ஆண்டாள் கண்டு எடுக்கப்பட்டார் என்று தெரியுமா என்று கேட்டு அந்த இடத்தை பார்த்து சிறுது மண்ணை அந்த இடத்தில இருந்து எடுத்து காகிதத்தில் மடித்து பையில் வைத்துக்கொண்டார். ஏன் என்று கேட்டதற்கு , இங்கே அவ்வளவு சிறந்த பாடல்கள் பாடிய பெண்மணி கண்டெடுக்க பட்டதாக சொல்லப்படுகிறது . அந்த இடது மண்ணை எடுத்து நாமும் அந்த தமிழை அருகில் வைத்து இன்பமடயலாம் என்று கூறியிருக்கிறார்.
இது அவர் தமிழ் மேல் வைத்திருந்த காதலையும் மதிப்பையும் காட்டும் ஒரு செயல் அல்லவா?.
No comments:
Post a Comment